முக்கியச் செய்திகள் இந்தியா

சீன எல்லையில் 50 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டது ஏன்?

சீன எல்லையில் இந்தியா மேலும் 50 ஆயிரம் ராணுவ வீரர்களை குவித்துள்ளது.

லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் 2019ம் ஆண்டு சீனா ராணுவத்தினருக்கும் இந்திய விரர்களுக்கும் நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்தியா-சினா எல்லை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. இதையடுத்து இருதரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இரு நாட்டு பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதால் எல்லையில் ஓரளவு நிலமை சீரானது.

ஆனால் சீனா அவ்வப்போது அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இந்தியப்படைகள் விலக்கிக்கொள்ளப் படவில்லை. இந்நிலையில் தற்போது 50,000 ராணுவ வீரர்களை சீன எல்லையில் நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சீன எல்லைப் பகுதியில் 3 முக்கிய இடங்களில் போர் விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. சீன ராணுவம் கூடுதலான படையினரை திபெத்தில் இருந்து ஜிங்ஜியாங் ராணுவ தளத்துக்கு அனுப்பியுள்ளது. மேலும், போர் விமானங்கள், நீண்ட தூரம் தாக்கும் பீரங்கிகளை எல்லைப் பகுதியில் சீனா நிறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement:

Related posts

வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசு அதிமுக:முதல்வர்!

நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் பிரச்சாரம்!

Saravana Kumar

ஐ.பி.எல் போட்டிகளில் புதியதாக இரண்டு அணிகள் சேர்ப்பு!

Halley karthi