ரவீந்திரநாத் தாகூரை அவமரியாதை செய்தாரா பிரதமர் மோடி? – உண்மை சரிபார்ப்பில் கண்டறியப்பட்டது என்ன?

This News is Fact Checked by BOOM ரவீந்திரநாத் தாகூரை பிரதமர் மோடி அவமரியாதை செய்ததாக பகிரப்பட்டுவரும் வீடியோ தவறான தகவல்களுடன் பகிரப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம், பாரக்பூரில் பாஜக உறுப்பினர்…

This News is Fact Checked by BOOM

ரவீந்திரநாத் தாகூரை பிரதமர் மோடி அவமரியாதை செய்ததாக பகிரப்பட்டுவரும் வீடியோ தவறான தகவல்களுடன் பகிரப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், பாரக்பூரில் பாஜக உறுப்பினர் ஒருவர்,  பிரதமர் நரேந்திர மோடிக்கு ரவீந்திரநாத் தாகூரின் ஓவியத்தை தலைகீழாக வழங்க,  அதனை பிரதமர் பெற்றது போன்ற வீடியோவை பகிர்ந்து,  ரவீந்திரநாத் தாகூரை பிரதமர் மோடி அவமரியாதை செய்வதாக பகிரப்பட்டது.

ஆனால், அந்த ஓவியத்தை பிரதமர் மோடி, மீண்டும் நேராக சரிசெய்த பகுதியை வீடியோவில் இருந்து அகற்றப்பட்டதை BOOM செய்தி நிறுவனம் கண்டறிந்தது. மேலும் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், பிரதமர் மோடி ஓவியத்தை நேராக வைத்திருப்பதை காணமுடிகிறது.

வடக்கு வங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் தலைவர் அர்ஜுன் சிங் ஆகியோர் முன்னிலையில் பட்பாரா தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் பவன் சிங், ரவீந்திரநாத் தாகூரின் ஓவியத்தை பிரதமரிடம் வழங்கும் 17 விநாடிகள் கொண்ட வீடியோ பகிரப்பட்டு வருகிறது. பவன்சிங் ஓவியம் தலைகீழாக இருப்பதை கண்டுகொள்ளாமல் மோடியிடம் அளித்துள்ளார். மஜும்தார் சிங் ஓவியத்தை நேராக்க சொல்வதற்குள் பிரதமரை பவன்சிங் தொடர்பு கொள்கிறார்.

இந்த வீடியோவை நேற்று முன்தினம் (மே 12) சந்தேஷ்காளி குறித்த கருத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சிக்க, திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதேபோல், வீடியோவின் ஸ்கிரீன்சாட்டை பகிர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி சகரிகா கோஸ், “வங்காளத்தில் ஓட்டு வேண்டும். ஆனால் ரவிந்தரநாத் தாகூர் எப்படி இருப்பார் என்று தெரியவில்லை. பிரதமர் மோடி, குருதேவ் ரவிந்தரநாத் தாகூரை அவமதிக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

உண்மை சரிபார்த்தல்

வைரலான இந்த வீடியோ சித்தரிக்கப்பட்டதை BOOM கண்டறிந்தது. மே 12-ம் தேதி மேற்கு வங்கத்தின் பாரக்பூரில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் முழு வீடியோ பதிவில், அவர் தாகூரின் ஓவியத்தை நேராக பிடித்தபடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். மே 12, 2024 அன்று பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இருந்து இந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

பவன் சிங் தாகூர் ஓவியத்தை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்த வீடியோவின் வைரலான பகுதியை 2:39 நிமிடங்களில் இருந்து பார்த்தால், சரியாக 2:45 நிமிடத்தில் தொடங்கி, தாகூரின் ஓவியத்துடன் மேடைக்கு செல்கிறார் பவன் சிங். அந்த ஓவியம் தலைகீழாக இருப்பதைக் கவனிக்காமல் பிரதமர் மோடியும், மஜும்தாரும் நிற்பதைக் காணலாம்.

பவன்சிங் ஓவியத்தை மோடியிடம் ஒப்படைத்தவுடன், இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதை காணலாம். சில நிமிடங்களுக்குப் பிறகு, ஓவியம் தலைகீழாக இருப்பதை மஜும்தார் கவனித்து, அதை நேராக்க பவன் சிங்கிடம் சமிக்ஞை செய்கிறார். பின்னர் பிரதமரும், பவன்சிங்கும் தாகூரின் ஓவியத்துடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.

Note: This story was originally published by ‘BOOM and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective….

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.