ரஜினியை வைத்து படம் இயக்க ஆசை: ராஜமௌலி

ரஜினியை வைத்து படம் இயக்க தனக்கு விருப்பமுள்ளதாக இயக்குனர் ராஜமெளலி தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாஸ்திரம் செப்டம்பர் 9ம் தேதி வெளியாக உள்ள நிலையில்…

ரஜினியை வைத்து படம் இயக்க தனக்கு விருப்பமுள்ளதாக இயக்குனர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாஸ்திரம் செப்டம்பர் 9ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் சென்னை சத்யம் திரையரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்து வருகின்றனர். இதில் இயக்குனர் ராஜமௌலி, நடிகர் நாகர்ஜுனா, ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.


அப்போது மேடையில் பேசிய இயக்குனர் ராஜமௌலி “ நான் இயக்குநராக இங்கு வரவில்லை. புதிய அவதாரத்தில் வந்துள்ளேன். இந்த படத்தின் பிரசென்டராக வந்துள்ளேன். இந்த ஆண்டின் அதிக செலவில் உருவான படம் இது. இந்த ஆண்டு என்று சொல்ல முடியாது. பல வருடமாக இந்த படத்தை உருவாகி வருகிறோம்.இது சாதாரணமான விஷயம் கிடையாது. ஹீரோக்கு பவர் கொடுப்பது சாதாரணம் விஷயம் கிடையாது. கமர்சியல் படமாக இதை உருவாகி உள்ளோம். இந்த படத்திற்கு 8 ஆண்டுகள் கொடுத்தாலும் பத்தாது. இறுதி நேரத்தில் கூட சில மாற்றம் செய்யலாம் என இயக்குனர் நினைப்பார்கள்” எனப் பேசினார்.


பின் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ராஜமௌலி: “நான் பிறப்பால் ஒரு தெலுங்கராக இருந்தாலும் தென்னிந்திய மக்கள் எனக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்தனர். குறிப்பாகத் தமிழ்நாடு மக்கள் மாற்று மொழி படங்களாக இருந்தாலும் கதையம்சம் கண்டு கொண்டாடுகின்றனர். இதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது” என கூறியதோடு “நான் ஏற்கனவே சொன்னது தான். ரஜினிகாந்த் உடன் படம் பண்ண எல்லா இயக்குநர்களுக்கும் விருப்பம் தான். எனக்கும் அவரை வைத்து படம் இயக்க ஆசை தான். அதற்கான நேரம் அமைய வேண்டும்.” என தெறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.