எம்எல்ஏக்களை ரூ.20 கோடிக்கு வாங்க பாஜக பேரம்-ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தில்லி அரசை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக அங்கு ஆளும் ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. ஆம் ஆத்மி தலைவர்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என்று அக்கட்சி குற்றம்சாட்டியது. மேலும், எங்கள் கட்சியின் எம்எல்ஏக்களை …

தில்லி அரசை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக அங்கு ஆளும் ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. ஆம் ஆத்மி தலைவர்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என்று அக்கட்சி குற்றம்சாட்டியது.

மேலும், எங்கள் கட்சியின் எம்எல்ஏக்களை  ரூ.25 கோடிக்கு வாங்க பாஜக பேரத்தில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டியுள்ளது.

5 மூத்த ஆம் ஆத்மி தலைவர்கள் இன்று செய்தியாளர் சந்திப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பணம் மற்றும் மிரட்டல் மூலம் கவர்ந்திழுக்க முயற்சிப்பதாக பாஜகவை கடுமையாக சாடியுள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், ராஜ்யசபா எம்பியுமான சஞ்சய் சிங் கூறியதாவது:

பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம், தேசிய தலைநகரில் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு மத்திய அமைப்புகளை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை அம்பலப்படுத்துவேன். டெல்லி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரத்தில் ஷிண்டேவிடம் செய்தது போல் மணீஷ் சிசோடியாவிடம் செய்ய பாஜக முயன்றது.

ஆனால், அந்த முயற்சியில் பாஜக தோல்வி அடைந்தது. மேலும், எங்கள் எம்எல்ஏக்களிடம் ரூ.20 கோடியை பெற்றுக் கொண்டு எங்கள் பக்கம் வாருங்கள். அல்லது சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என்று பாஜக மிரட்டியுள்ளது. மேலும் பல எம்எல்ஏக்களை அழைத்து வந்தால் ரூ.25 கோடி அளிக்கப்படும் என்றும் பாஜக பேரம் பேசியுள்ளனர் என்று கூறினார் சஞ்சய் சிங்.

மேலும் 4 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும் அவருடன் செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்தனர்.
இந்தக் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது.

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் சமீபத்தில் மத்திய புலனாய்வுப் பிரிவினரால் (சிபிஐ) சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

மதுக் கொள்கையில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் கேள்விகளில் இருந்து “விலகவும் திசைதிருப்பவும்” ஆம் ஆத்மி முயற்சிப்பதாக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா கூறுகையில், “கெஜரிவால் கட்சி தொடர்ந்து டிரெய்லர்களை வெளியிடுகிறது ஆனால் படம் வரவே இல்லை. தங்கள் கட்சி பிளவுபடுவதாகவும், பாஜக பணம் வழங்க பேரம் பேசியதாக கூறப்படும் ஆடியோ கிளிப்புகள் தங்களிடம் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அதை வெளியிட மறுக்கிறார்கள். இதை அவர்கள் தொடர்ந்து செய்வார்கள். ஏனென்றால் அவர்களின் குற்றச்சாட்டில் உண்மையில்லை” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.