பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா படிப்படியாக அதிகரித்து வருகிறது. தினமும் 20,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் பாலிவுட் நடிகர்கள் சதீஷ் கௌசிக், ரன்பீர் கபூர், சஞ்சய் லீலா பன்சாலி, மனோஜ் பாஜ்பாய், மற்றும் சித்தாந்த் சதுர்வேதி ஆகியோருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டது.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நடிகர் கார்த்திக் ஆரியனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அமிர் கானுக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவரது செய்தி தொடர்பாளர் வெளியிட்ட செய்திகுறிப்பில், ”அமிர் கானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு உங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.







