இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு: 80,000-ஐ கடந்த பாதிப்பு!

இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பால் இதுவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் டெங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. இதையும்…

இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பால் இதுவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் டெங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு புள்ளிவிவரம்
வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : ’நீர்வழிப்படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது!

டெங்கு பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவதையடுத்து, இலங்கையில் டெங்கு பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. டிசம்பரில் மட்டும் இதுவரை 3,704 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளன.

இதையடுத்து ஞாயிறு காலை நிலவரப்படி மொத்தம் 80,192 பேருக்கு டெங்கு பாதிக்கப்பட்டுள்ளது. டெங்கு பாதித்து 47 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மேற்கு மாகாணத்தில் 46.4 சதவீதத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.