மிக்ஜாம் புயல் பாதிப்பு – முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மதிமுக சார்பில் ரூ.10.20 லட்சம்!

வெள்ள நிவாரண நிதியாக மதிமுக சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்து 20 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால்…

வெள்ள நிவாரண நிதியாக மதிமுக சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்து 20 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைநீர் அதிகளவில் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது. இதையடுத்து, தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் தமிழ்நாடு அரசும், மாநகராட்சி நிர்வாகமும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை  மேற்கொண்டு வருகிறது. மேலும், தன்னார்வலர்கள், நடிகர்கள்,நடிகைகள், பலரும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். மேலும், சிலர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று  மக்களை நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களை அளித்தும் வருகின்றனர்.

இதையும் படியுங்கள் ; ’நீர்வழிப்படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது!

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், பொது நிவாரண நிதிக்கு  நிதி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும் அனைத்து சட்டப்பேரவை, அதன்படி, அமைச்சர்கள், திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மதிமுக சார்பில் கட்சியின் எம்.பி மற்றும் எம்எல்ஏக்கள் இணைந்து ரூ. 10 லட்சத்து 20 ஆயிரத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று (டிச.11) நேரில் சந்தித்து இதற்கான காசோலையை வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.