டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் ; 9 வது குற்றவாளியை கைது செய்த என்.ஐ.ஏ….!

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான 9 வது குற்றவாளியை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் தேதி, மாலையில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் 13 பேர் பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலை நிகழ்த்தியது டாக்டர் உமர் முகமது என்ற பயங்கரவாதி என கண்டறியப்பட்டது. தேசிய புலனாய்வு அதிகாரிகளின் விசாரணையில் இதுவரை தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட காரை வாங்கி கொடுத்து உதவிய அமீர் ரஷித் அலி உள்ளிட்ட பலரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய 9 வது குற்றவாளியாக ஜம்மு – காஷ்மீரை சேர்ந்த யாசின் அகமது என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

என்.ஐ.ஏ அதிகாரிகள் பட்டியாலா நீதிமன்றத்தின் முதன்மை மாவட்ட அமர்வில் சிறப்பு நீதிபதி பிரசாந்த் சர்மா முன்பாக யாசினை ஆஜர்படுத்தினர். இதையடுத்து அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று யாசின் அகமதுவை டிசம்பர் 26 ஆம் தேதி வரையில் என்ஐஏ காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.