’ஜனநாயகன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது…!

ஜனநாயகன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ’ஒரு பேரே வரலாறு’ தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். தற்போது  ஹெச். வினோத் இயக்கத்தில் ’ஜனநாயகன்’ என்னும் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பிரேமலூ புகழ் மமிதா பைஜூ, பாபி தியோல், கெளதம் மேனன், பிரியாமணி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் விஜயின் கடைசி படம் என்பதால் இப்படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் வரும் டிசம்பர் 27ம் தேதி நடைபெறவுள்ளது.

சமீபத்தில் வெளியான ஜனநாயகன் படத்தின், தளபதி கச்சேரி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ஜனநாயகன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ’ஒரு பேரே வரலாறு’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்பாடலுக்கு விவேக் வரிகள் எழுத
விஷால் மிஸ்ரா மற்றும் அனிருத் பாடியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.