இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுவதில்லை என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைய பல காரணங்கள் இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா பார்க்கிறார்.
அதில் முக்கிய இரண்டு காரணங்களாக, மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரிவர பின்பற்றவில்லை என்றும் மேலும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கொரோனா தடுப்பூசிப் போட தொடங்கியபோது நோய்த்தொற்று பாதிப்பு விகிதம் குறைவாக இருந்ததாக ரன்தீப் குலேரியா குறிப்பிட்டார். கொரோனா பரவல் அதிகரிக்கும் இந்த நேரத்தில் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது மறுபுறம் மத வழிபாடுகளும் பொது இடங்களில் நடந்துக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக மத வழிபாட்டிற்காக அங்கு மக்கள் ஒன்றுக் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட வேண்டும் மேலும் அதில் கலந்து கொள்ளும் பொதுமக்களும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அவர் அறிவுறித்தனர். மேலும் கொரோனா தடுப்பூசியை அனைத்து மக்களுக்கும் செலுத்துவதற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்பமேளா விழாவில் கலந்து கொண்ட இந்து துறவிகள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.







