முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா வைரஸ் ; கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம், பொதுமக்கள் வெளியேவரவும் தடை!

கனடாவின் ஒண்டாரியோ மாகணத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் அங்கு மீண்டும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுள்ளது. மேலும் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உலக நாடுகளை தொடந்து அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவிலும் கொரோன வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அங்கு கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்ததால் உடனடியாக அவசர நிலையை பிரகடன படுத்திய அந்நாட்டு அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக அங்கு கொரோனா வைரஸ் தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதனிடையே கடந்த சில தினங்களாக அங்கு பலமாகாணங்களில் புதிய வைரஸ் பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் எல்லையில் அமைந்துள்ள ஒண்டாரியோ மாகாணத்தில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன் காரணமாக அங்கு மீண்டும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வரவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுள்ளது. இது தொடர்பாக தெரிவித்துள்ள ஒண்டாரியோ மாகாண நிர்வாகத் தலைவர் டக் ஃபோர்டு, கொரோனா வைரஸ் அதிகரிப்பு காரணாமாக மீண்டும் மாகாணம் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுகிறது. இந்த அவசர நிலை இன்று முதல் 28 நாட்களுக்கு அமலில் இருக்கும். இந்த அவசர நிலை காலங்களில் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களை வாங்க ஒருவர் மட்டும் வெளியே வரலாம், அதேபோல் நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு சம்மந்தபட்ட நிறுவனங்கள் வீட்டில் இருந்தபடியே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுவரை கனடாவில் 6,81,000 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 18 ஆயிரம் பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

யூடியூப் தலைமைப் பதவியில் இந்திய வம்சாவளியை சார்ந்த நீல் மோகன் நியமனம்!

Jayasheeba

ஜம்முவையும் – காஷ்மீரையும் இணைக்கும் கேபிள் ரயில் பாலம்!

Jayasheeba

தேர்தலில் எதிரொலிக்குமா விவசாயிகளின் போராட்டம்?

EZHILARASAN D

Leave a Reply