Gold Rate | தங்கம் விலை மீண்டும் உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை கடந்த டிச.22ம் தேதி ரூ.1 லட்சத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. அதன்பிறகு, தங்கம் ஏற்ற இறக்கத்தை சந்தித்து ஆட்டம் காட்டியது. இருப்பினும், தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கு குறையாமல் விற்பனையாகி வருகிறது.

இதனிடையே நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,16,640-க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,580-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.14,600-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,16,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் 2-வது நாளாக இன்றும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.