முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு – திமுக சட்டமன்ற உறுப்பினர் கைது…!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவில்பட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் தோனியில் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு டிஎஸ்பி தலைமையிலான போலிசார் இன்று விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் இல்லத்திற்கு சென்று அவரை கைது செய்தனர்

முன்னதாக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணனை கடந்த ஜூலை 3 ஆம் தேது கைது செய்யப்பட்டு இருந்தார். பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.