காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு…?

தமிழ் நாட்டில் இன்று காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ் நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (ஜூலை 20) இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை தமிழ் நாட்டில் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், தேனி, நீலகிரி, தென்காசி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.