சிவகிரி பகுதியில் மானை வேட்டையாடிய 3 பேருக்கு தலா 25 ஆயிரம் அபராதம் விதித்தனர் வனத்துறையினர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் தொடர்ந்து மான்கள் வேட்டையாடபடுவதாக புகார் வந்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து காட்டுக்குள் ரோந்து சென்றபோது போலீசார் அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த மூன்று நபர்களை பிடித்து விசாரித்தபோது, தேவிபட்டினம் பகுதியைச் சேர்ந்த பத்மநாபன், சேத்தூர் பகுதியைச் சேர்ந்த சிங்கராஜு, அழகுமலை வேட்டையாட காட்டுக்குள் செல்ல இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடமிருந்து அரிவாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களைப் பறிமுதல் செய்து, அவர்களுக்கு 25 ஆயிரம் வீதம் மூன்று பேருக்கும் 75 ஆயிரம் அபராதத் தொகையை விதித்தனர். தொடர்ந்து வனப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.







