காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் ஜூன் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
டெல்லியில் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் ஜூன் 22ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் கலந்துகொள்ள விருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு உரிய நீர் திறப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், குறுவை சாகுபடி குறித்து நீர்திறப்புக்கான கோரிக்கை முன்வைக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று நடைபெறவிருந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டம் ஜூன் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.







