உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் இருந்து கர்ணபிரயாக் நோக்கிச் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 35க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இதனிடையே ரிஷிகேஷ் – பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் தெக்ரி கர்வால் மாவட்டம் குலார் பஜார் பகுதியில் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாடை இழந்து பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் 26 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்தபோது சுமார் 30 முதல் 35 பயணிகள் இருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாலத்திலிருந்து சுமார் 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் பேருந்து பாய்ந்ததால் இந்தக் கோர விபத்து ஏற்பட்டுள்ளது.




