முக்கியச் செய்திகள் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் கார் நெல் சாகுபடி பணிகளுக்காக 4 நீர் தேக்கங்கள் திறப்பு!

தென்காசி மாவட்டத்தில் கார் நெல் சாகுபடி பணிகளுக்காக 4 நீர் தேக்கங்கள் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள ராமநதி நீர்த்தேக்கத்தை திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் திறந்து வைத்தார். கடையநல்லூர் கருப்பா நதி நீர்த்தேக்கத்தை தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் திறந்து வைத்தார்.

கடனாநதி அடவி மற்றும் நயினார் கோவில் நீர்த்தேக்கங்களை அந்த பகுதி விவசாயிகள் சங்க தலைவர்கள் மற்றும் விவசாயிகள் குழுவினர் திறந்து வைத்துள்ளனர். ஒரே நாளில் 4 நீர் தேக்கங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 8,555 ஏக்கர் அளவிலான விவாசய நிலங்கள் பலனடையும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

நூற்றுக்கணக்கான சாதனைகளை அதிமுக அரசு செய்துள்ளது: முதல்வர் பழனிசாமி

Halley karthi

கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்படவில்லை: சுகாதாரத்துறை செயலாளர்

Ezhilarasan

புதிய பாடப்புத்தக விநியோகம் குறித்து அதிகாரிகள் ஆலோசனை!

Ezhilarasan