வங்கக் கடலில் உருவானது “முரசு” புயல்! – இந்திய வானிலை மையம்

மேற்கு-மத்திய வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், “முரசு” புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செய்தியைக் கேட்க
AI குரல் வடிவம்
0:00 –:–

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை, கடந்த 3 மணி நேரத்தில் மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று, 01 நவம்பர், 2026, இந்திய நேரப்படி காலை 08:30 மணியளவில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில், அட்சரேகை 11.8°N மற்றும் தீர்க்கரேகை 85.9°E-க்கு அருகில், சென்னைக்கு (தமிழ்நாடு) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 630 கி.மீ., விசாகப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தெற்கு-தென்கிழக்கே 710 கி.மீ., நெல்லூருக்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே 710 கி.மீ., மச்சிலிப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கே 710 கி.மீ. மற்றும் ஒங்கோலுக்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே 750 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடாப் பகுதிகளில் புயலாகவும், நவம்பர் 2 ஆம் தேதி மேற்கு-மத்திய வங்காள விரிகுடாப் பகுதிகளில் முரசு புயலாகவும் வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாக என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் இன்று, 2026 நவம்பர் 1-ஆம் தேதி, இந்திய நேரப்படி காலை 11:30 மணிக்கு, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், “முரசு” (Murasu) புயலாக வலுவடைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த முரசு புயல் நவம்பர் 2 ஆம் தேதி அதாவது நாளை மேற்கு-மத்திய வங்காள விரிகுடாப் பகுதிகளில் கடுமையான புயலாகவும் வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது என்றும், தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 3 ஆம் தேதி காலைக்குள் நெல்லூர் மற்றும் நர்சபூர் இடையே மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்துடனும், சில சமயங்களில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் திடீர் காற்று வீச்சுடனும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடக்க அதிக வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.