கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள் மங்களூரில் இருந்து ரயில் மூலம் விருத்தாச்சலத்திற்கு வந்தது. அவற்றை பிரித்து அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் குறைந்து தென்மேற்கு பருவ மழை துவங்குவதற்கான சாத்தியகூறுகள் தென்படுகின்றன.இதனையடுத்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஜூன் முதல் ஜூலை வரையிலான குறுவை சாகுபடிக்கு தேவையான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக கடலூர் உள்ளிட்ட நான்கு மாவட்ட விவசாய பணிகளுக்கு தேவையான உரங்கள் கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து ரயில் மூலம் விருத்தாசலத்திற்கு வந்தடைந்தது. இந்த உரங்களில் கிட்டதட்ட 1080 மெட்ரிக் டன் அளவிற்கு பொட்டாஷ் உரமும், 253 மெட்ரிக் டன் உர அளவிற்கு கலப்பு உரங்களும் உள்ளடங்கும்.
இதனை லாரிகள் மூலம் கடலூர்,திருவண்ணாமலை,காஞ்சிபுரம்,அரியலூர் மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வேந்தன்







