‘ஸ்டார்ட் அப் தமிழா’ என்ற ரியாலிட்டி ஷோவை நடத்தும் தமிழ்நாடு அரசு!

வேலை தேடுபவர்களை, வேலை வழங்குபவர்களாக மாற்றும் வகையில் ‘ஸ்டார்ட்அப் தமிழா’ என்ற ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியை தமிழ்நாடு அரசு நடத்த உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. வேலை தேடுபவர்களிடமிருந்து வேலை வழங்குபவர்களாக தமிழ்நாட்டு இளைஞர்களை மாற்றும்…

வேலை தேடுபவர்களை, வேலை வழங்குபவர்களாக மாற்றும் வகையில் ‘ஸ்டார்ட்அப் தமிழா’ என்ற ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியை தமிழ்நாடு அரசு நடத்த உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

வேலை தேடுபவர்களிடமிருந்து வேலை வழங்குபவர்களாக தமிழ்நாட்டு இளைஞர்களை மாற்றும் வகையிலும், தொழில்முனைவோர் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான முயற்சியிலும் தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட்அப் நிறுவனம் இறங்கியுள்ளது. அதற்காக தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவை நடத்தவுள்ளது.

தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் முன்னெடுப்பின் மூலம் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிறுவனம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மூலமாக ஸ்டார்ட்அப்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை வெற்றிகரமான முயற்சிகளாக வளர்ப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

மேலும், புத்தாக்க நிறுவனங்களின் மூலம் முதலீட்டு சூழலை மேம்படுத்தும் முயற்சியாக நிகழ்ச்சியை வடிவமைத்து, தொழில்முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று, படப்பிடிப்பு மற்றும் ஒளிபரப்பு செய்யவும், சீசனுக்கு 13 எபிசோட்கள் என மூன்று ஆண்டுகளுக்குள் குறைந்தது மூன்று சீசன்களையாவது இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டு பகுதிகளைக் கொண்ட நிகழ்ச்சியில் பயன்கள் தொடர்பான பின்னணி, முதலீட்டாளர்களுக்கு வணிக திட்டங்களை வழங்கும் வகையில் வடிவமைப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.