கடலூரில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன், 2020-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். ஜாமினில் வெளிவந்த அவர், கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்.
இந்நிலையில், மதியழகனை நேற்று 7 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கு தொடர்பாக மேலும் 13 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : Stories Share செய்ய விரும்புவோரா நீங்கள்! இதோ உங்களுக்காகவே Telegram-ன் புதிய அப்டேட்!
மேலும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர் துணைக்காவல் கண்காணிப்பாளர் பிரபு மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.







