முக்கியச் செய்திகள் தமிழகம்

குழந்தைகளுக்கு எதிரான குற்றவாளிகளை கண்காணிக்க வேண்டும்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் புரிந்தவர்களை தினமும் கண்காணித்து அவர்கள் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தடுக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து காவல் துறையினருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார். அடுத்த கட்டமாக வன்முறையாளர்கள், கூலிப் படையினர், கொலைக் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திருட்டு வழக்குகளில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருடப்பட்ட பொருட்களை மீட்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.தொடர்ந்து தவறு செய்யும் ரவுடிகளை மாவட்ட வருவாய் அதிகாரி முன் ஆஜர்படுத்தி நல்லொழுக்கப் பத்திரம் பெற வேண்டும் எனவும், மீறுபவர்களை ஓராண்டு காலம் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 

மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் புரிந்தவர்களை அன்றாடம் கண்காணித்து, அவர்கள் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தடுக்க வேண்டும் எனவும் காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விஷாலின் ’எனிமி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Ezhilarasan

திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும்?

Saravana Kumar

அரசு பேருந்தில் பயணம் செய்த ஆளுநர் தமிழிசை!

Jeba Arul Robinson