ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவி மதிமுகவிற்கு: திமுக

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவி மதிமுகவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சி தலைவர் பதவியும், பரமக்குடி, கோவில்பட்டி, குளித்தலை ஆகிய நகராட்சி துணை…

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவி மதிமுகவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சி தலைவர் பதவியும், பரமக்குடி, கோவில்பட்டி, குளித்தலை ஆகிய நகராட்சி துணை தலைவர் பதவிகளும் மதிமுகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ‘இது இந்தியா இங்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது’

திருவேங்கடம், ஆடுதுறை, சென்னசமுத்திரம் ஆகிய பேரூராட்சி தலைவர் பதவிகள் மற்றும் பாளையம், அவல்பூந்துறை, அரச்சலூர் ஆகிய பேரூராட்சி துணை தலைவர் பதவிகளும் மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.