சமூக வலைதளங்களை விட்டு வெளியேறிய டிஜிபி சைலேந்திரபாபு.

தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவை பின் தொடர்ந்த லட்சக்கணக்கான சமூக வலைதள வாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமூக வலைதளங்கள் விழிப்புணர்வுக்கு எப்படியெல்லாம் பயன்படுத்த முடியுமோ, அந்தந்த வகையிலும் அதனை பயன்படுத்திக் கொண்டவர் தான் டிஜிபி…


தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவை பின் தொடர்ந்த லட்சக்கணக்கான சமூக வலைதள வாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


சமூக வலைதளங்கள் விழிப்புணர்வுக்கு எப்படியெல்லாம் பயன்படுத்த முடியுமோ, அந்தந்த வகையிலும் அதனை பயன்படுத்திக் கொண்டவர் தான் டிஜிபி சைலேந்திர பாபு. கடந்த காலங்களில் காவல் துறையில் பல்வேறு பதவிகளை வகித்த சைலேந்திர பாபு, தனக்கு கிடைத்த நேரங்களில் சைக்கிளிங் செய்வது, எந்தெந்த உணவை எடுத்துக்கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது தொடங்கி, பல தலைப்புகளில் தனக்கு தெரிந்த தகவலை, மற்றவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில், வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இப்படி, அவர் வெளியிட்ட வீடியோக்கள் இணையப் பக்கங்களில் வைரலானதால், சமூக வலைத்தளங்களில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்தது.
தான் ஒரு காவலதிகாரி என்பதால், கிடைக்கும் இடத்தை பயன்படுத்தி உடற்பயிற்சி செய்வது எப்படி என இவர் விவரித்த வீடியோ இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது.

நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் சைக்கிளிங் செய்யும் சைலேந்திர பாபு, சாலையோரத்தில் சிறுவியாபாரிகளிடம் நுங்கு, கொய்யா, இளநீர் என ஒரு கை பார்ப்பவர், அந்த இடத்திலேயே வீடியோ பதிவு செய்து, பிறரையும் இயற்கை உணவுக்கு பரிந்துரைப்பார். ஆரோக்கிய உணவு குறித்த இவரது வீடியோ தான், பலருக்கு எந்தெந்த வேளையில் என்னென்ன உணவு எடுக்க வேண்டும் என்பதற்கான ஃபிட்னஸ் ரகசியம்.

பள்ளி, கல்லூரிகள் என்று மாணவர்கள் மத்தியில் பேசுவதற்கு கிடைக்கிற வாய்ப்ப பயன்படுத்தி, மாணவர்கள கல்விய நோக்கி மடை மாற்றுகிற வேலைய ரொம்ப எளிமையாக செய்வார் சைலேந்திர பாபு. இது மட்டுமில்லாம, தற்காப்பு கலைகள், ஹெல்மெட் போடுறதன் அவசியம்னு.. பலருக்கும் பயன்படுற பலநூறு விஷயங்கள் பகிர்ந்துகிட்டவர் டிஜிபி சைலேந்திர பாபு.

தற்போது, டிஜிபியாக பதவி உயர்வு பெற்றதால், தன்னோட அத்தனை சமூக வலைத்தள கணக்குகளையும் முடக்கியிருக்கிறது தான், அவரை பின் தொடர்பவர்கள அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. உயர்பதவியில் இருப்பதால் தனிப்பட்ட கணக்குகள்ல பயணிக்க கூடாதுன்னு முடிவெடுத்திருந்தாலும், அவரோட வீடியோக்கள பார்த்து தங்கள மெருகேற்றிக்கிட்ட லட்சக்கணக்கானோருக்கு இது பெரிய ஏமாற்றம் என்றே சொல்லலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.