அணு ஆயுத போர் நடத்தும் திட்டம் எதுவும் ரஷ்யாவிடம் இல்லை என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கி லாரவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் போர் 8வது நளாக நீடித்து வரும் நிலையில், இது அணு ஆயுத போராக மாறுமா என்ற கேள்வி உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவிடம் அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளதால், அந்நாடு அணு ஆயுத போரில் ஈடுபடக் கூடும் என்ற கருத்து அதிகரித்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், அணு ஆயுத போர் நடத்தும் திட்டம் எதுவும் ரஷ்யாவிடம் இல்லை என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கி லாரவ் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அணு ஆயுத போர் குறித்த எண்ணம் ஐரோப்பிய நாடுகளின் அரசியல்வாதிகளிடம்தான் அதிகம் காணப்படுவதாகக் கூறியுள்ளார்.
அதேநேரத்தில், அணு ஆயுதங்களை ரஷ்யா முதலில் பயன்படுத்தாது என உறுதி அளிக்க முடியுமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் அளிக்க மறுத்துவிட்டார். மேலும் அதேநேரத்தில், அணு ஆயுதத்தை உக்ரைன் பெறுவதை ரஷ்யா ஒருபோதும் அனுமதிக்காது என்றும் . முன்னதாக, அணு ஆயுத தாக்குதலை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு, தனது ராணுவத்துக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டிருந்தார். எனினும், பிற நாடுகள், உக்ரைன் போரில் தலையிடாமல் தவிர்க்கும் நோக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர் என்று செர்கி லாரவ் ஏற்கனவே கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.