#Crime | இளம்பெண் சடலத்துடன் 2 நாட்கள் வசித்த கொலையாளி | வெளியான திடுக்கிடும் தகவல்!

சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேஸில் இருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையை அடுத்த துரைப்பாக்கம் குமரன் நகர் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ரத்தக் கறைகளுடன் சூட்கேஸ்…

சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேஸில் இருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் குமரன் நகர் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ரத்தக் கறைகளுடன் சூட்கேஸ் ஒன்று கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், இது குறித்து துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துரைப்பாக்கம் போலீசார், ரத்தக் கறைகளுடன் இருந்த சூட்கேஸைத் திறந்து பார்த்த போது, பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், பெண் உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த உடல் பாகங்களில் உள்ள அடையாளங்களை வைத்து யார் என போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டது சென்னை மணலி பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் என்பதும், அவரது பெயர் தீபா என்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட மணிகண்டன்

சம்பவ இடத்தில் காவல் இணை ஆணையர் மற்றும் அடையாறு துணை ஆணையர் ஆய்வு செய்தனர். அது மட்டுமல்லாமல், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, போலீசார் சந்தேகத்தின் பேரில் சிவகங்ககையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது, கொலை செய்யப்பட்ட தீபா பாலியல்ரீதியான தொழில் செய்து வந்ததாகவும், தனக்கும் தீபாவுக்கு பணம் கொடுக்கல், வாங்கலில் பிரச்னை ஏற்பட்டதாகவும், இந்த பிரச்னை முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மணிகண்டன், தீபாவை சுத்தியால் அடித்து கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

மேலும், கொலை செய்து விட்டு சடலத்தை 2 நாட்கள் தன் வீட்டில் வைத்திருந்திருக்கிறார். தொடர்ந்து, சூடகேஸை ஆர்டர் செய்து வாங்கி, அதில் சடலத்தை வைத்து யாருக்கும் தெரியாமல் சாலையில் வீசிச் சென்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.