#Delhi : அதிஷி தலைமையில் புதிய அரசு | அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு?

அதிஷி தலைமையிலான புதிய அரசு நாளை மறுநாள் பதவியேற்கவுள்ளது. அவருடன் அமைச்சர்களாக பதவியேற்போர் விவரம் வெளியாகியுள்ளது. கலால் கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமின் பெற்ற டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முதலமைச்சர் அலுவலகம் செல்லக்…

Delhi: List of ministers headed by Atishi published! Who has a chance!

அதிஷி தலைமையிலான புதிய அரசு நாளை மறுநாள் பதவியேற்கவுள்ளது. அவருடன் அமைச்சர்களாக பதவியேற்போர் விவரம் வெளியாகியுள்ளது.

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமின் பெற்ற டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முதலமைச்சர் அலுவலகம் செல்லக் கூடாது, கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது என உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. இதனையடுத்து முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். புதிய முதலமைச்சராக அதிஷி தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து முதலமைச்சராக அதிஷி நாளை மறுநாள் பதவியேற்க உள்ளார். அப்போது அவருடன் பதவியேற்கும் அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்த கோபால் ராய், கைலாஷ் கஹ்லோட், சவுரப் பரத்வாஜ், இம்ரான் ஹுசைன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுல்தான்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முகேஷ் அஹ்லாவத் புதிய அமைச்சராக பதவியேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.