12-14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

நாடு முழுவதும் 12 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. கொரோனா தொற்று தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி நாடு முழுவதும் தடுப்பூசி…

நாடு முழுவதும் 12 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

கொரோனா தொற்று தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணி, உரிய மருத்துவ நிபுணத்துவத்தை கொண்டு இரண்டு தவனைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நோய் தொற்றுக்கு எதிராக கூடுதல் எதிர்ப்புசக்த்தியை உண்டுசெய்ய, ஜனவரி 3-ஆம் தேதி முதல் 15-18 வயதுடைய சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்துப்பட்டு வருகிறது.

மேலும், ஜனவரி 10-ஆம் தேதி முதல் மூர்த்த குடிகளுக்கும், முன் களப் பணியாளர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு கொரோனா தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. இதற்கிடையே 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதில், பயாலஜிக்கல்-இ நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள கோர்பிவேக்ஸ் தடுப்பூசியை மட்டும் சிறார்களுக்கு செலுத்த வேண்டும் என்றும், 28 நாள் இடைவெளியில் 2 டோஸ்கள் செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 12 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், 60 வயதான அனைவருக்கும் இன்று முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையான பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.