பரத் – வாணி போஜன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கான படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் பரத். திரைத்துறையில் நடிகராக தனது பயணத்தை தொடங்கி பல வெற்றி படங்களை அளித்த நடிகர் பரத் தற்போது R.P.பாலா இயக்கத்தில் வாணி போஜனுடன் சேர்ந்து நடிக்க உள்ளார்.
இப்படம் பரத் நடிக்கும் 50வது படமாகும். இந்த படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. இவ்விழாவில் திரைப்பட குழுவினரோடு பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். லூசிபர், மரைக்காயர், குருப் உள்ளிட்ட மலையாள படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதிய R.P.பாலா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இத்திரைப்படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில், த்ரில்லர் கலந்த பேமிலி டிராமா திரைப்படமாக உருவாகும் என்வும் மேலும் இப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக வாணி போஜன் நடிப்பதால் இந்த காம்போ கலக்கலாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், RP பிலிம்ஸ் பிரமாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றது. விவேக் பிரசன்னா, பிக் பாஸ் புகழ் டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரபல ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இந்நிலையில், இதற்கான படப்பிடிப்புகள் விரைவில் முடிந்து இந்த திரைப்படத்திற்கான ரிலீசுக்கு மொத்தக் குழுவும் காத்திருப்பதாக தெரிவித்தனர். பரத் – வாணி போஜன் காம்போவில் ஒரு த்ரில்லர் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.









