3வது அலை வந்தாலும் அதை சமாளிக்க அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எ.வ. வேலு

தமிழநாட்டில் 3வது ஆலை வந்தாலும் அதை சமாளிக்க அரசு தயாராக உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 470 பேருக்கு திருவண்ணாமலை…

தமிழநாட்டில் 3வது ஆலை வந்தாலும் அதை சமாளிக்க அரசு தயாராக உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 470 பேருக்கு திருவண்ணாமலை வியாபாரிகள் சங்கம் சார்பில் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் எ.வ.வேலு, 3வது அலையை எதிர்கொள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான படுக்கை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் மூன்றாம் அலையை குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.