ஹெச்.ராஜா மீது விசாரணை நடைபெறுவது உட்கட்சி விவகாரம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வடபழனி முருகன் கோயிலில் இன்று தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், கொரோனா தடுப்பூசி எவ்வளவு வந்தது? எவ்வளவு பயன்படுத்தினோம் என்ற விவரத்தை தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஹெச்.ராஜா மீது நடைபெறும் விசாரணை என்பது உட்கட்சி விவகாரம் எனத் தெரிவித்த எல்.முருகன், “அதனை கட்சி பார்த்து கொள்ளும்.நாங்கள் தேர்தல் செலவுக்கு 4கோடி கொடுத்தால் தானே அதைப்பற்றி விசாரிக்க முடியும். கட்சி சார்பில் வேட்பாளர்களுக்கு பணம் வழங்கவில்லை” என்று பதிலும் அளித்தார்.
புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவி ஏற்கும் போது ஒன்றிய அரசு என்று பயன்படுத்தியது குறித்து பின்னர் பேசுகிறேன். திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைப் போல பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்துக் கொண்டால் நாங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் எனவும் எல்.முருகன் வலியுறுத்தினார்.
அத்துடன், கருப்பர் கூட்டத்திற்கு எதிராக வேல் யாத்திரை நடத்தியபோது வைக்கப்பட்ட கோரிக்கைகளை தொடர்ந்து தமிழக அரசிடம் வலியுறுத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.







