இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா என்கிற உயிர்க்கொள்ளி தொற்று கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உலகை ஆட்டிப் படைத்து வருகிறது. உலக நாடுகள் மொத்தமும் இந்த வைரஸுக்குள் சிக்கிக் கொண்டு சின்னா பின்னமாகி வருகிறது. இதற்கிடையே, அடிக்கடி உருமாறும் இந்தத் தொற்று அனைவரையும் மிரட்டிக் கொண்டிருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வராத இந்த வைரஸை எப்படி அடக்கி ஆள்வது என தெரியா மல் உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. தடுப்பூசி போட்டாலும் அதை மீறியும் தலை தூக்குகிறது இந்தத் தொற்று.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,230 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து இதுவரை மொத்தம் 3,15,72,344 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 555 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து இதுவரை 4,23,217 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 42,360 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 3,07,43,972 பேர் குணமடைந்து உள்ளனர். நாடு முழுவதும் தற்போது 4,05,155 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 45,60,33,754 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் நேற்றைய தினம் 51,83,180. தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.