இந்தியாவில் தங்கத்தின் தேவை 19% அதிகரிப்பு

இந்திய சந்தைகளில் தங்கத்தின் தேவை ஏப்ரல்- ஜூன் காலாண்டில் 19% அதிகரித்துள்ளதாக, சர்வதேச கோல்டு கவுன்சில் தெரிவித்துள்ளது கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் கடந்த வருடம் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் தங்கத்துக்கான தேவை…

இந்திய சந்தைகளில் தங்கத்தின் தேவை ஏப்ரல்- ஜூன் காலாண்டில் 19% அதிகரித்துள்ளதாக, சர்வதேச கோல்டு கவுன்சில் தெரிவித்துள்ளது

கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் கடந்த வருடம் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் தங்கத்துக்கான தேவை மக்களிடம் குறைந்து காணப்பட்டது. இப்போது நிலைமை ஓரளவு சீரடைந்து வருவதால், தங்கத்திற்கான தேவை அதிகரித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தங்கத்தின் தேவை 63.8 டன்னாக இருந்தது. இது நடப்பாண்டில் இதே காலாண்டில் 19.2 சதவிகிதம் அதிகரித்து 76.1 டன்னாக எட்டியிருக்கிறது.

ஆபரணத் தேவைக்கான தங்கம் இரண்டாவது காலாண்டில் 25 சதவிகிதம் அதிகரித்து 44 டன்னில் இருந்து 55.1 டன்னாக உயர்ந்துள்ளது. கடந்த வருடத்தை விட, நடப்பாண்டின் ஜூன் காலாண்டில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 10.9 டன்னில் இருந்து 120.4 டன்னாக அதிகரித்துள் ளது என சர்வதேச கோல்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.