ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள்

தமிழ்நாட்டு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க டோக்கியோ சென்றுள்ள தமிழ்நாட்டு வீரர்கள், கொரோனா பாதிப்பின்றி பாதுகாப்புடன் இருப்பதாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு சர்வதேச அளவில் பயிற்சி அளிக்கும் திட்டம் அரசிடம் இருப்பதாக என கூறினார். விளையாட்டு மைதானங்களை சர்வதேச அளவில் தரம் உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாட்டு வீரர்கள், பாதுகாப்புடன் உள்ளதாகவும், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதுவரை 3 வீரர்களும், ஒலிம்பிக் கிராமத்துடன் தொடர்புடைய 58 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒலிம்பிக் கிராமத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,தொற்று தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் இதுவரை 19,09,20,752 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,10,99,701 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். 12,57,24,814 பேர் குணமடைந்துள்ளனர். 40,96,237 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: 5 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலை போடும் பணி தொடக்கம்

Jeba Arul Robinson

சபாநாயகர் தேர்தல்: அப்பாவு வேட்புமனு தாக்கல்!

இன்று கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!