இஸ்ரோ அனுப்பிய ஆக்சிஜன்!

இஸ்ரோ மையத்தில் இருந்து நாகர்கோயில் அரசு மருத்துவமனைக்கு 5 டன் ஆக்சிஜன் டேங்கர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் 500-க்கும் அதிகமானோர்…

இஸ்ரோ மையத்தில் இருந்து நாகர்கோயில் அரசு மருத்துவமனைக்கு 5 டன் ஆக்சிஜன் டேங்கர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் 500-க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதையொட்டி, ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் இருந்து 5 டன் ஆக்சிஜன் நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் உள்ள டேங்கரில் ஆக்சிஜன் நிரப்பப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.