ஊரடங்கு கட்டுப்பாடுகளை வலுப்படுத்தும் காவல்துறையினர்!

திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர்பகுதிகளில் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை அதிவேகமாகப் பரவிவருவதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையிலும், மக்கள் அத்தியாவசிய…

திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர்பகுதிகளில் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை அதிவேகமாகப் பரவிவருவதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையிலும், மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்லும் நிலையில், காவல் துறையினர் தீவிர கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

அத்தியாவசியத் தேவைகளின்றி வெளியே வருபவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் இ-பதிவு முறை கட்டாயம் என மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளனர். அத்தியாவசிய தேவையின்றி விதிமுறைகளை மீறி சாலையில் சுற்றி திரிந்த 123 நபர்கள் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 150 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்று மாவட்ட காவல் துறை தெரிவித்தனர். மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 1,026 பேர், சமூக இடைவெளியைப் பின்பற்றாத 19 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.