முக்கியச் செய்திகள் இந்தியா

முதல்வராக பதவியேற்கவுள்ளார் பினராயி விஜயன்!

கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் 2வது முறையாக நாளை பதவியேற்கவுள்ளார்.

கேரள மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில், இடதுசாரி ஜனநாயக முன்னணி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

இதனையடுத்து மாநிலத்தின் முதலமைச்சராக பினராயி விஜயன் நாளை இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். திருவனந்தபுரத்திலுள்ள விளையாட்டு அரங்கில் நாளை மாலை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் முதல்வருடன் 11 புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆரிஃப் முகமது பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் சட்டபேரவை குழு தலைவராக பினராயி விஜயன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து ஆளுநர் ஆரிஃப் முகமதுவை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆட்சி அமைக்க பினராயி விஜயனுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்த நிலையில் நாளை கேரள முதல்வராக பினராயி விஜயன் இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார்.

Advertisement:

Related posts

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஆதரவு அளிக்கும் இந்தியாவுக்கு நன்றி- WHO!

Jayapriya

இலங்கை தமிழர்களின் உரிமைகளுக்கு ஐநா வில் இந்தியா முதலில் குரல் எழுப்ப வேண்டும் : தமிழக எம்பிக்கள் கோரிக்கை

Niruban Chakkaaravarthi

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் வேட்புமனு தாக்கல்!

Jeba