முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தில், விரைவில் தடுப்பூசி உற்பத்தி : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தில், விரைவில் தடுப்பூசி உற்பத்தி துவங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான பாஸ்டியர் நிறுவனம், வெறிநாய்க்கடி தடுப்பூசி உற்பத்திக்காக கடந்த 1907ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 303 பணியாளர்களுடன் இயங்கி வரும் இம்மையத்தில் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல் மற்றும் ரண ஜன்னி ஆகிய மூன்று வியாதிகளை தடுப்பதற்கு டிபிடி தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக நீலகிரி மாவட்டத்திற்கு வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், வனத்துறை அமைச்சர் .ராமச்சந்திரன் மற்றும் சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாஸ்டியர் நிறுவனத்தை ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 2019 ஆம் ஆண்டு 137 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட ஆய்வகத்தில், மாதத்திற்கு ஒரு கோடி கோவிட் தடுப்பூசி குப்பிகளை நிரப்பும் திறனை கொண்டுள்ளதாகவும், விரைவில் இங்கு தடுப்பூசி உற்பத்தி செய்யும் பணிகள் துவங்கப்படும்” என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Advertisement:

Related posts

முகக்கவசம் அணியாதவர்களுக்கு 6 மாதம் சிறை!

Karthick

மேட்டூர் அணை 12-ல் திறப்பு: முதல்வர் உத்தரவு

Karthick

வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாதுகாப்புப்படை வீரர் சீனா ராணுவத்திடம் ஒப்படைப்பு!

Saravana