முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

யானைகளுக்கு கொரோனா பரிசோதனை: அமைச்சர் தகவல்!

யானைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய மருத்துவக் குழு அனுப்பி வைக்கப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா தொற்று மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் ஏற்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 11 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்ட நிலையில் நிலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது. 

இதனைத் தொடர்ந்து  உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து பூங்கா அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதலமைச்சர், பின்னர் பேட்டரி கார் மூலம், பூங்காவுக்குள் சென்று சிங்கங்கள் அடைக்கப்பட்டுள்ள பகுதியை ஆய்வு செய்தார்.

இதனிடையே முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கபட்டு முறையாக கொரோனா விதிகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், முதுமலை மற்றும் டாப்சிலிப் முகாம்களில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய மருத்துவக் குழு வளர்ப்பு யானைகள் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அதற்கான உத்தரவிடபட்டுள்ளதாகவும் கூறினார். 

Advertisement:

Related posts

காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்ன? சோனியாவிடம் அறிக்கை தாக்கல்!

அமைச்சரவையில் பாஜக இடம்பெறுவது குறித்து பின்னர் ஆலோசிக்கப்படும் – சி.டி.ரவி

Gayathri Venkatesan

தடுப்பூசி கொள்முதலுக்கு மறு டெண்டர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Karthick