முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா தடுப்பு பணிகள்: இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு இறுதியாண்டு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்குச் சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. இந்திய அளவில் தினம்தோறும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தினம்தோறும் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.
தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பணியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களை ஈடுபடுத்துவதற்காக முதுகலை நீட் தேர்வை மத்திய அரசு 4 மாதங்களுக்குச் சமீபத்தில் ஒத்தி வைத்தது.

இந்நிலையில் இன்று சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக இறுதியாண்டு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் இறுதியாண்டு மருத்துவம் பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வேண்டும். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 40,000 வழங்கப்படும்.

gccteledoctor2021@gmail.com குறிப்பிட்ட ஆவணங்களை 13.05.2021 தேதி மதியம் 2.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்

மேற்குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டிய ஆவணங்கள்:

சுய விவரம் ( resume)
இறுதி ஆண்டுக்கு முந்தைய ஆண்டிற்கான மதிப்பெண் சான்றிதழ் (pre final year mark list)
பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ( 12th mark sheet)
கல்லூரி அடையாள அட்டை ( identy card)

கூடுதல் விவரங்களுக்கு: 044-25619330 தொலைப்பேசி எண்ணை அழைக்கவும்

பணியிடங்கள் – 300

தேர்வு செய்யும் முறை: மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 13.05.2021 அன்று தொலைப்பேசி மூலமாக நேர்காணல் நடத்தப்படும். இதில் தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்கள் 14.05.2021 தேதி முதல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரிய வேண்டும்.

Advertisement:

Related posts

விண்வெளி பயணம்: சூடு பிடிக்கும் காஸ்ட்லி டூர்

Gayathri Venkatesan

மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

Ezhilarasan

மு.க ஸ்டாலினுக்குப் பன்னீர் செல்வம் வாழ்த்து!

Halley karthi