குன்னூரில் கொரோனா தொற்று காரணமாக தடை செய்யப்பட்ட பகுதியில் தடுப்பூசி செலுத்தும் பணியினை சுகாதார துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆரம்ப கட்டத்தில் 27 நபர்களுக்கு தொற்று உறுதியானது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், மருத்துவர் கார்த்திக் தலைமையில் அப்பகுதியில் உள்ள அனைவருக்குமே தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதார துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனையும் மேற்கொண்டு வருகின்றனர்.







