கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு பொறியியல் கல்லூரியில் செயல்பட்டுவரும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் பயிற்றுவிக்கப்படும் யோகா வகுப்புகள் நோயாளிகள் பூரண குணமடைந்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகள் தனியார் கல்லூரிகள் கோணம் அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து தனியார் கல்லூரிகளில் செயல்பட்டுவந்த சிறப்பு சிகிச்சை மையங்கள் காலி செய்யப்பட்டன.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மிக குறைவான அளவில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவில்லில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 68 நோயாளிகளுக்கு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு அலோபதி மற்றும் ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் மறுபுறம் சிறப்பு யோகா பயிற்சி மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வட்ட நோயாளிகளை போலல்லாமல் இந்த சிறப்பு சிகிச்சை மையத்தில் யோகா மற்றும் பிராணாயாமம் பயிற்சி பெற்று வருபவர்கள் மிகவும் சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் காணப்படுகின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் பெண் மருத்துவர்கள் கூறும்போது ” கொரோனா நோயாளிகளுக்கு யோகா மற்றும் பிராணயாம சிகிச்சை அழிக்கப்பட்டு வருவதால் இவர்கள் 5 நாட்களில் குணமடைந்து வருகின்றனர். இங்கு பயிற்சி அளிக்கப்படும் யோகா பயிற்சிகளை நோயாளிகள் வீட்டிலும் சென்று தொடர்ந்து செய்து வந்தால் அவர்கள் விரைவாக குணம் பெற்று மன நிறைவுடன் மகிழ்ச்சியுடன் தங்கள் அன்றாட வாழ்க்கையை தொடர இது பேருதவியாக இருக்கும்” என்று தெரிவித்தனர். இது போன்ற பயிற்சிகள் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.







