நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம்…! – பீகாரில் 30 பேர் கைது

பீகார் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக 30 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2026-27-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இதனால் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில் பீகாரில் மாநிலத்தில் நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் ஈடுபட்டதாக இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பீகார் மாநிலம் லக்கிசாராவில் உள்ள ஹசன்பூர் உயர்நிலைப் பள்ளி நீட் தேர்வு மையத்தில் மயங்க் கஷ்யாப் எனபவர் போலி அடையாள அட்டையுடன் தேர்வெழுத வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சந்தேகத்தின் பேரில் காவலர்கள் அவரை விசாரித்ததில் அவர் பாட்னா மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பதாகவும், வேரு ஒருவருக்கு பதிலாக நீட் தேர்வு எழுத வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லக்கிசராயில் உள்ள கே.ர்.கே பள்ளி மற்றும், கேந்திரியா வித்யாலயா தேர்வு மையத்தில் போலீசார் சோதனை செய்தனர். இதில் மொத்தம் 30 பேர் வரை ஆள்மாராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். அதில் 9 பேர் ஆள்மாராட்டத்தில் ஈடுபட்டதாகவும், 21 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, வினாதாள் கசிவு, ஹால் டிக்கெட் பதிவிரக்கம் உள்ளிட்ட குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில் தற்போது ஆள்மாராட்டம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.