முக்கியச் செய்திகள் இந்தியா

நாடு முழுவதும் ஆக்சிஜன் கையிருப்பு எவ்வளவு உள்ளது: மத்திய அரசு தகவல்!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நாடு முழுவதும் 50- ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக அளவு ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் போதுமான அளவுக்கு ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. தற்போது நாடு முழுவதும் 50,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக ஆக்சிஜன் இருக்கிறது. இந்தியாவில் தினமும் 7 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த உற்பத்தி மேலும் அதிகரிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜனை உரிய தேவை இருந்தால் மட்டுமே உபயோகிக்கும்படியும், வீணாவதை தடுக்கும்படியும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இரும்பு தொழிற்சாலைகளில் கூடுதலாக உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைக்கு ஏற்ப மருத்துவத்துக்கு உபயோகிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் விநியோகத்தை சீரமைக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கும்படியும் மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. கூடுதலாக ஆக்சிஜன் இருப்பில் உள்ள மாநிலங்களில் இருந்து கூடுதலாகத் தேவைப்படும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் போதுமான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சை அளிப்பது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குளேரியா உள்ளிட்டோருடன் ஹர்ஷ்வர்தன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ச்சியாக மேலும் சில மருத்துவமனைகளில் அடுத்தடுத்த நாட்களில் ஹர்ஷ்வர்தன் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் 56% பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்: ராதாகிருஷ்ணன்

Ezhilarasan

பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி!

Gayathri Venkatesan

அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார் டிவில்லியர்ஸ்

Halley karthi