அமரர் ஊர்தியாக மாறிய குப்பை வண்டி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராஜ்நந்த்கான் டவுன் பகுதியில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் சடலம் குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் பகுதியில் கடந்த சில…

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராஜ்நந்த்கான் டவுன் பகுதியில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் சடலம் குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் பகுதியில் கடந்த சில தினங்களாக 10,000 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதற்கேற்றார் போல் அம்மாநிலத்தில் மருத்துவ வசதிகள் போதுமானதாக இல்லை. நேற்று மட்டும் கொரோனாவால் 14,250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 120 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தலைநகர் ராய்பூர் மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க ஆக்சிஜன், படுக்கை வசதி ஆகியவை போதுமானதாக இல்லாமல் உள்ளது. அதேபோல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களைப் பாதுகாக்கப் பிணவறையில் குளிரூட்டும் பெட்டிகள் போதுமானதாக இல்லை. இதனால் மருத்துவமனையில் பல பகுதிகளில் கொரோனாவால் பலியானவர்களின் உடல்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்ல போதுமான அமரர் ஊர்தி வண்டிகளும் இல்லாத காரணத்தால் குப்பை வண்டியை ஒன்றை அமரர் ஊர்தியாக மாற்றியுள்ளனர் மருத்துவமனை நிர்வாகத்தினர்.

இதற்காக நான்கு தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உடைகளை அணிந்துகொண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் சடலத்தைக் குப்பை வண்டியின் பின்புறத்தில் வைத்து இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பேசிய மருத்துவமனையின் முதன்மை அலுவலர், “கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வது நகர பஞ்சாயத்து, அரசின் கடமையாகும். இந்த விஷயத்தில் நாங்கள் என்ன செய்வது” என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.