புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி மையங்களை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடமாடும் தடுப்பூசி மையங்களின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன், பொதுமக்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்களின் பங்களிப்பு மிக முக்கியம் எனக் கூறிய அவர், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.







