முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தமிழகத்தில் தடுப்பூசி வீணாக்கப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி வீணாக்கப்படவில்லை, முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நியூஸ்7 தமிழுக்கு ப்ரத்யோக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம், வள்ளியூர், பாளையங்கோட்டை பகுதிகளில் கொரானா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதனிடையே நியூஸ்7 தமிழுக்கு பேட்டியளித்த அமைச்சர், கொரோனா தடுப்பூசி, முதல் அலையின் போது 13 சதவிகிதம் வீணாக்கப்பட்டது உண்மைதான் என்றும் தடுப்பூசியை 6 மாதத்திற்குள் பயன்படுத்தாமல் வீணடித்ததாகத் தெரிவித்தார்.

ஆனால் தற்போது அந்த நிலை இல்லை என்றும் தடுப்பூசி விணாகாத வகையில் தமிழகத்தில் ஒரே நாளில் 2 லட்சத்து 53 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கிராமப்புறங்களில் நோய் தொற்றைக் குறைக்கும் வகையில் 100 வீட்டுக்கு ஒரு சுகாதார பணியாளர் நியமிக்கப்பட்டு ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், கிராமத்தில் 3 பேருக்கு மேல் தொற்று இருந்தால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார். கிராமப்புறங்களிலும் தொற்று பரவுவது விரைவில் குறையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement:

Related posts

மனைவியின் உடலை அடக்கம் செய்ய இடம் தேடி அலைந்த முதியவர்

Karthick

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட கமல்!

Niruban Chakkaaravarthi

மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்ட கொரோனா நோயாளி!

Hamsa