GOLD RATE : சற்றே உயர்ந்த தங்கம் விலை…!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை,கிராமுக்கு ரூ.300 குறைந்து ஒரு கிராம் ரூ.13,500-க்கும், சவரனுக்கு ரூ.2,400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,000-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்றே உயர்வு கண்டுள்ளது. அதன் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,800-க்கும், சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,10,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை பொலவே வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. இதன்படி வெள்ளிவிலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.265க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.