தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு பிரச்னைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிலைமை மோசமான பிறகு நிலக்கரி வரத்து குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், சீரான மின் விநியோகத்திற்கு திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.
மேலும், திமுக அரசின் நடவடிக்கை கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதைப் போல உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். மின் விநியோகத்தில் திமுக அரசின் மெத்தனப்போக்கு கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு பிரச்னைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளார்.